தேசிய செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாரதீய ஜனதா முன்னிலை + "||" + Karnataka polls: BJP leading in 14 seats, Congress 6 and JD(S) and others in one each

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாரதீய ஜனதா முன்னிலை

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாரதீய ஜனதா முன்னிலை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்ணப்பட்டு வருகின்றன. இதில் தற்போது பாரதீய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது. #KarnatakaElections
பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. 

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு, நிமிடம் மாறிக்கொண்டே உள்ளது. 

இதனால், எந்த கட்சி பெரும்பான்மை பெறும் என்பதை கணிக்க முடியாத நிலையே உள்ளது.  முன்னிலை நிலவரம் தெரிய வந்த 211 தொகுதிகளில் 65  இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையும் 102 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையும் வகிக்கின்றன. ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள்  மூன்று இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.