தேசிய செய்திகள்

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாரதீய ஜனதா 109 இடங்களில் முன்னிலை + "||" + Karnataka Verdict Live Updates: Close fight between BJP, Congress; JD(S) looks set to play key role

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாரதீய ஜனதா 109 இடங்களில் முன்னிலை

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாரதீய ஜனதா 109 இடங்களில் முன்னிலை
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் பின் தங்குகிறது. #KarnatakaElection2018
பெங்களூரு

கர்நாடகாவின் 224 சட்டசபை தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் பாரதீய ஜனதா  - 109 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 60 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் - 46 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

2013 தேர்தலில் காங்கிரஸ் 224 தொகுதிகளில் 123 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை காட்சிகள் மாறுகிறது. பாரதீய ஜனதா பெரும்பான்மையான இடத்தில் முன்னணியில் உள்ளது.