தேசிய செய்திகள்

கர்நாடக தேர்தல்: போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடைவு + "||" + Karnataka Election: In both contested volumes Siddaramaiah Lag

கர்நாடக தேர்தல்: போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடைவு

கர்நாடக தேர்தல்: போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடைவு
கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட இருதொகுதிகளிலும் முதல்வர் சித்தராமையா பின்னடைவை சந்திக்கிறார். #KarnatakaElection2018
பெங்களூரு,

கர்நாடக தேர்தலில் பெரும் செல்வாக்குடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவை சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜிடி தேவகவுடா.  சித்தராமையாவை விட தேவகவுடா 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் உள்ளார்.

இந்த வெற்றியை தேவகவுடா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் பதாமி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவுக்கு பின்னடைவு  ஏற்பட்டு உள்ளது.

ஷிகாரிபுரா தொகுதியில் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் எடியூரப்பா முன்னிலை வகிக்கிறார்.

முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கடந்த தேர்தலில் சித்தராமையா வெற்றிபெற்ற தொகுதியான வருணாவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக சட்டசபை: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்.அவருக்கு ஆதரவாக 117 வாக்களித்தனர். #Kumaraswamy
2. கர்நாடகாவில் ஆபரேஷன் கமல்-கை: சூடு பிடிக்கும் கடைசிநேர பேரம்
கர்நாடகாவில் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக- காங்கிரஸ் தலைவர்கள் கடைசி நேர பேரத்தில் குதித்துள்ளனர்.
3. கவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு
கர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் ஜனதாதள (எஸ்) தலைவர் குமாரசாமி அணி தாவாமல் இருக்க எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். #KarnatakaElections2018
4. ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டும் பா.ஜ.க -குமாரசாமி
ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது பா.ஜ.க என குமாரசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
5. கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை குமாரசாமி சொல்கிறார்
கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி கூறி உள்ளார். #HDKumaraswamy