தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை + "||" + BJP Crosses 112 Majority Mark In Karnataka In Leads

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. #KarnatakaElection2018
பெங்களூரு

கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 59 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் - 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது. தமிழர்கள் அதிகம் இருக்கும் கர்நாடகாவின் பெங்களூரில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.

காந்தி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் முன்னிலை வகிக்கிறார். சி வி ராமன் நகரில் பாஜக கட்சியின் எஸ் ராகு முன்னிலை வகிக்கிறார். சாந்தி நகரில் காங்கிரஸ் கட்சியின் என் எ ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார்.

புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகந்த ஸ்ரீனிவாச மூர்த்தி முன்னிலை வகிக்கிறார். சர்வக்ஞா நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் முன்னிலை வகிக்கிறார். மேலும் தமிழர்கள் அதிகம் இருக்கும் சிக்பேட் பகுதியில் பாஜக கட்சியின் உதய் பி கருடாச்சார் முன்னிலை வகிக்கிறார்.

மூடபித்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அபய சந்திரா ஜெயினை வீழ்த்தி, பாஜக வேட்பாளர் உமாநாத் கோட்டையன் வெற்றி பெற்று உள்ளார்.