தேசிய செய்திகள்

காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம்; மத்திய தலைமை அல்ல: கர்நாடக அமைச்சர் டிகே சிவகுமார் + "||" + Karnataka Assembly Election Results 2018: Local leadership failed miserably, says DK Shivakumar

காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம்; மத்திய தலைமை அல்ல: கர்நாடக அமைச்சர் டிகே சிவகுமார்

காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம்; மத்திய தலைமை அல்ல: கர்நாடக அமைச்சர் டிகே சிவகுமார்
காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம், மத்திய தலைமை அல்ல என்று கர்நாடக அமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். #KarnatakaAssemblyElection
சென்னை,

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாறாக எதிர்க்கட்சியான பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி பாஜக 121 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 59 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலைபெற்றுள்ளன. பாஜகவின் முதல் மந்திரி வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. ஆனால், பாஜக தற்போது 110 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதனால்  பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைமையே காரணம் என்றும் மத்திய தலைமை  அல்ல என கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.  இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவக்குமார், தனது கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், ஏமாற்றம் அடைந்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சிவக்குமார் மேலும் கூறும்போது, “ காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் யாரையும் குற்றம் சாட்டவிரும்பவில்லை. 100 தொகுதிகளுக்கும் மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால், மிகவும் பரிதாபமான தோல்வியே மிஞ்சியுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்படும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.