மாநில செய்திகள்

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து + "||" + Mk stalin wishes yeddyurappa who won the karnataka assembly election

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். #Mkstalin #KaranatakaVerdict
சென்னை,

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாறாக எதிர்க்கட்சியான பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 121 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

காங்கிரஸ் கட்சி 59 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலைபெற்றுள்ளன. பாஜகவின் முதல் மந்திரி வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. ஆனால், பாஜக தற்போது 110 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால், தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதனால் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள எடியூரப்பாவுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டரில் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “ கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யும் என அதிமுக நிர்வாகிகள் எப்படி கூற முடியும்? ஸ்டாலின் கேள்வி
அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2. திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வலது தொடையில் சிறிய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வலது தொடையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
3. திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும்: மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Karunanidhi #KauveryHospital #DMK #ripkarunanidhi #MKStalin
4. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மு.க ஸ்டாலின் மீண்டும் வருகை
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு மு.க ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.