தேசிய செய்திகள்

சாலையில் நடந்த சண்டையில் முதியவர் உயிரிழந்த வழக்கு: சித்துவுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம் + "||" + Congress' Navjot Singh Sidhu Won't Go To Jail In Road Rage Case, Fined By Supreme Court

சாலையில் நடந்த சண்டையில் முதியவர் உயிரிழந்த வழக்கு: சித்துவுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

சாலையில் நடந்த சண்டையில் முதியவர் உயிரிழந்த வழக்கு: சித்துவுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்
சாலையில் நடந்த சண்டையில் முதியவர் உயிரிழந்த வழக்கில் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #SupremeCourt
புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவருமான, நவ்ஜோத் சிங் சித்து, கடந்த, 1988-ல், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சாலையில் குர்னம் சிங் 65, என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில் நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்; இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், சித்துவை விடுவித்தது. இருப்பினும், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவாக நீதிபதிகள் அறிவித்தனர்.வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், சித்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த மாதம் 14-ம் தேதிவிசாரணைக்கு வந்தது. 

அப்போது, பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை,'' என்றார். இந்த வழக்கில் இரு தரப்பு  வாதங்கள் முடிந்ததையடுத்து, இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதில், சித்துவுக்கு அபராதம் மட்டும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம், 30 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், சிறை தண்டனையில் இருந்து சித்து தப்பினார். வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய 2 பெண்களின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
2. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது ஜன.8-ல் விசாரணை
ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
3. மே.வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
மேற்கு வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல் முறையீடு செய்துள்ளது.
4. மேகதாது விவகாரம் : மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
5. காலிஸ்தான் ஆதரவாளருடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதால் சர்ச்சை
காலிஸ்தான் ஆதரவாளர் கோபல் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.