தேசிய செய்திகள்

காங்கிரஸ், மஜதவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும்: மம்தா பானர்ஜி + "||" + Mamata Banerjee says results would have been very different if Congress-JD(S) had allied

காங்கிரஸ், மஜதவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும்: மம்தா பானர்ஜி

காங்கிரஸ், மஜதவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும்: மம்தா பானர்ஜி
காங்கிரஸ், மஜதவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். #MamataBanerjee
கொல்கத்தா, 

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாறாக எதிர்க்கட்சியான பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

105 தொகுதிகளில் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 69 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

கர்நாடகாவில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள பாஜகவுக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு எனது வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தால் முடிவுகள்  முற்றிலும் மாறுபட்டு இருந்து இருக்கும். தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள்” என்று தெரிவித்து உள்ளார்.