தேசிய செய்திகள்

கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதாவை விட அதிக ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் + "||" + Karnataka elections More than Bharatiya Janata Congress with higher votes

கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதாவை விட அதிக ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ்

கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதாவை விட அதிக ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ்
கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதியில் வெற்றி பெற்று இருந்தாலும், மிகவும் குறைவான வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது.
பெங்களூர்

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 111 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஆனால் பதிவாகி இருக்கும் வாக்குகள், வேறு விதமான விவரங்களை கொண்டுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும், காங்கிரஸ் அதிக சதவிகித மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது.

1 மணி நிலவரப்படி பாஜகவை விட காங்கிரஸ் 1.3 % கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 38 சதவீதம்,  பாஜக 36.7 சதவீத  வாக்குகள் பெற்று இருந்தது. இது இரண்டு கட்சியினர் இடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதசார்பற்ர ஜனதாதளம் 17.7 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.

அதேபோல் நேரமாக நேரமாக வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு குறைந்து கொண்டே வருகிறது. காங்கிரஸைவிட பாஜகவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைகிறது. தற்போதைய நிலவரப்படி 1.3% கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ்.