கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குமாரசாமி; முதல்வர் பதவியை விட்டுதர காங்கிரஸ் சம்மதம் + "||" + Kumaraswamy Set to be Kingmaker as Karnataka Heads for Hung Assembly
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குமாரசாமி; முதல்வர் பதவியை விட்டுதர காங்கிரஸ் சம்மதம்
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார் குமாரசாமி. முதல்வர் பதவியை விட்டுதர காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து உள்ளது. #KarnatakaElections2018
பெங்களூரு
கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இது எந்த கட்சிக்கும் கிடைக்காத பட்சத்தில் மதசார்பற்ற ஜனதாதளமே முதல்வரை முடிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதைத்தான் கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன.
குமாரசாமியின் பங்கு ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காக அமையும். மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 105 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதை தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க முதல் அமைச்சர் பதவியை குமராசாமிக்கு விட்டுதர காங்கிரஸ் முடிவு
செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதலவர் சித்தராமையா வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.