கிரிக்கெட்

சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக டெண்டுல்கர் சுமார் ரூ.4 லட்சம் நன்கொடை அளித்தார் + "||" + Tendulkar donates Rs 4 lakh to wheelchair cricket team

சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக டெண்டுல்கர் சுமார் ரூ.4 லட்சம் நன்கொடை அளித்தார்

சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக டெண்டுல்கர் சுமார் ரூ.4 லட்சம் நன்கொடை அளித்தார்
சச்சின் டெண்டுல்கர் இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளை நன்கொடையாக அளித்துள்ளார். #SachinTendulkar #Sponsorship
புதுடெல்லி,

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கடந்த திங்கட்கிழமை இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக ரூ.4.39 லட்சம் மதிப்பில் சக்கரநாற்காலிகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

மேலும் இந்தியா சக்கரநாற்காலி கிரிக்கெட் செயலாளர் பிரதீப் ராஜ் இதைப்பற்றி கூறுகையில்,

“நான் இந்தியா சக்கரநாற்காலி கிரிக்கெட் வாரியத்திற்காக நன்கொடை வேண்டி சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினேன்”. அதன் பின் அவர் தேவையான அளவு பணம் நன்கொடையாக வழங்கினார். "நான் அவரை (சச்சின் டெண்டுல்கர்) மின்னஞ்சல் செய்த மூன்று நாட்களுக்கு பிறகு அவருடைய அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டனா்” என்றார்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான சில கேள்விகளை முன் நிறுத்தினர்கள், இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு சச்சின் எங்களுக்கு பணத்தை நன்கொடையாக அளித்தார். இது உண்மையில் அவரது தரப்பில் இருந்து ஒரு பெரிய உதவியாக கருதப்படுகிறது என்று புகழ்ந்தார். இந்நிலையில் ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் அவரது அணி மற்றும் அவருடைய சிறந்த திட்டத்தை அவர் மேலும் தெரிவித்ததாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.