தேசிய செய்திகள்

பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயல்கிறது - எடியூரப்பா ஆவேசம் + "||" + Via the back door Congress is trying to rule yeddyurappa

பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயல்கிறது - எடியூரப்பா ஆவேசம்

பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயல்கிறது - எடியூரப்பா ஆவேசம்
மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் பின்வாசல் வழியாக, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயல்கிறது என எடியூரப்பா கூறி உள்ளார். #KarnatakaElection2018
பெங்களூரு

கர்நாடக பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மக்கள் தீர்ப்பை அவமதிக்கின்றன.

கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டனர் . மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி பேச்சு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் துடிக்கிறது. தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது, பின்வாசல் வழியாக, காங். ஆட்சியை பிடிக்க முயல்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.