தேசிய செய்திகள்

கர்நாடக தேர்தல்: இறுதி முடிவு வரும் வரை எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது - கவர்னர் வஜுபாய் வாலா + "||" + Karnataka Election: Until the final decision arrives No party has a call Governor Vajibai Wala

கர்நாடக தேர்தல்: இறுதி முடிவு வரும் வரை எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது - கவர்னர் வஜுபாய் வாலா

கர்நாடக தேர்தல்: இறுதி முடிவு வரும் வரை எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது - கவர்னர் வஜுபாய் வாலா
கர்நாடக தேர்தலில் இறுதி முடிவு வரும் வரை எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது என கவர்னர் வஜுபாய் வாலா கூறி உள்ளார். #Karnatakaelections2018
பெங்களூரு

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன்  மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவி மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் , துணை முதலமைச்சர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர் பதவிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர் பதவிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக மஜத மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

முதல்வர் சித்தராமையா, கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்த நிலையில் கர்நாடக கவர்னருக்கு  மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கடிதம்  எழுதியுள்ளார். 5.30 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைக்குமாறு குமாரசாமி கடிதம் எழுதி இருந்தார். அதன்படி    குமாரசாமி,  குலாம் நபி ஆசாத், மற்றும் மல்லிகார்ஜூனையா கார்கே ஆகியோர்  கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூருவில் மாலை 6.15 மணிக்கு, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

கர்நாடக தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஆளுநரை மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன் என எடியூரப்பா கூறினார்.

அதன் படி  ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இறுதி முடிவு வரும் வரை எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது  கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா கூறி உள்ளார்.