மாநில செய்திகள்

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி + "||" + Rajinikanth paid tribute to the death of writer Balakumaran

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
தமிழ்த்துறையில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார், இவர் மறைவுக்கு நடிகா் ரஜினிகாந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். #Balakumaran #Rajinikanth
சென்னை,

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதனால் பல்வேறு பிரபலங்கள் மற்றும் சினிமாத்துறையினரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனா்.

பாலகுமாரன் எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு தன்னுடைய வசனத்தை எழுதியிருக்கிறார். இவரின் உடல் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவா் பேசியதாவது,

“ பாலகுமாரனின் மறைவு எழுத்து உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு”. பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர், பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இவரது வசனங்கள் தான். “எனது மற்ற படத்திற்கு வசனம் எழுதவைக்க முயற்சித்தேன், அவர் ஆன்மிகமும், இலக்கியமும் தான் முக்கியம் என தவிர்த்து விட்டார்”. இவ்வாறு அவா் கூறினார்.