தேசிய செய்திகள்

பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வாரிய கூட்டம் டெல்லியில் இன்றிரவு 7 மணிக்கு கூடுகிறது + "||" + BJP Parliamentary Board to meet at 7 pm at party headquarters in Delhi today

பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வாரிய கூட்டம் டெல்லியில் இன்றிரவு 7 மணிக்கு கூடுகிறது

பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வாரிய கூட்டம் டெல்லியில் இன்றிரவு 7 மணிக்கு கூடுகிறது
பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வாரிய கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்றிரவு 7 மணிக்கு கூடுகிறது. #BJP #ParliamentaryBoardMeeting

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ந்தேதி நடந்து முடிந்தது.  இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது.  இதில் பாரதீய ஜனதா கட்சி அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  எனினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையிலான தொகுதிகளை அக்கட்சி பெறவில்லை.

அக்கட்சியின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 35 ஆயிரத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  தொடர்ந்து ஆளுநரை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சியானது மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.  இதனை ஏற்று கொண்டு மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கைவசம் இல்லாத சூழ்நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பாரதீய ஜனதா நாடாளுமன்ற வாரிய கூட்டம் இன்று 7 மணியளவில் நடைபெற உள்ளது.