தேசிய செய்திகள்

பெங்களூருவில் காங். எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது: 4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல் + "||" + Cong in Bangalore. Cong MLAs began: 4 MLAs not participated

பெங்களூருவில் காங். எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது: 4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல்

பெங்களூருவில்  காங். எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது:  4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல்
பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது: 4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடக சட்ட சபையின் பதவிக் காலம் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது.இதன் காரணமாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியிலும், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. எஞ்சிய 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி 38 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  இதில் தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றியது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். 

தொங்கு சட்ட சபை அமைந்ததுள்ளதால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கு இடையே கவர்னர் வஜூபாய் வாலாவை நேற்று மாலை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள நிலையில், தங்களைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அவர் கவர்னரிடம் உரிமை கோரினார். இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது. 

பரபரப்பான  இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில்  4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. 4 எம்எல்ஏக்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள சித்தராமையா, அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும், எந்த எம்.எல்.ஏவும் மாயம் ஆகவில்லை என்றும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்பேத்கர் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கவில்லை முதல்-மந்திரி பட்னாவிஸ் குற்றச்சாட்டு
ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்பேத்கர் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கவில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
2. ஆர்எஸ்எஸ், பாரதீய ஜனதா கட்சிகள் குண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஆர்எஸ்எஸ், பாரதீய ஜனதா கட்சி குண்டர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறது என குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
4. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது உண்மை விசாரணை அறிக்கையில் அம்பலம்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று விசாரணை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
5. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான்’ - விசாரணை அறிக்கையில் அம்பலம்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று விசாரணை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.