தேசிய செய்திகள்

மந்திரி பதவி தருவதாக எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Governor cannot take sides, says Congress as party alleges poaching efforts by BJP

மந்திரி பதவி தருவதாக எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மந்திரி பதவி தருவதாக எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மந்திரி பதவி தருவதாக தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. #KarnatakaElections2018
பெங்களூரு,

கர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளன. இதனால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது.

இதற்கிடையே, எம்.எல்.ஏக்களை பாதுகாக்க பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு  கொண்டு செல்ல காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு தேவையான எண்ணிக்கை உள்ளது. ஆளுநர் ஒருசார்பாக முடிவு எடுக்க முடியாது. தனிப்பெரும் கட்சிக்கு போதுமான எண்ணிக்கை இல்லை. அரசியல் அமைப்பை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர், அதை சிதைக்கவும் செய்வாரா? என்றார். 

இதற்கிடையே, பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்பு கொண்டு, மந்திரி பதவி வழங்குவதாகவும் எங்களிடம் வந்து விடுங்கள் என்று தெரிவித்ததாகவும், ஆனால், நாங்கள் குமாரசாமியை முதல் மந்திரியாக தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாக குஷ்டகி தொகுதி எம்.எல்.ஏ தெரிவித்தார்.