தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்: சுப்ரமணியன் சுவாமி டுவிட் + "||" + Sources tell me that Gov of K’taka will invite Yeddy

ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்: சுப்ரமணியன் சுவாமி டுவிட்

ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்: சுப்ரமணியன் சுவாமி டுவிட்
ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என தகவல் கிடைத்துள்ளது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். #Karnataka #Yeddyurappa
புதுடெல்லி,

கர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

 அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளன. இதனால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது.

இந்த நிலையில், பாரதீய ஜனதா மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க இருப்பதாக  எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என்று  தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.