தேசிய செய்திகள்

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு + "||" + Live Updates: second per second furore political situation in Karnataka

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு
கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடி மாற்றம் ஏற்பட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூர்

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு

பாஜக என்னை விலைக்கு வாங்க பார்த்தது; பணம், பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியது - காங்கிரஸ் எம்.எல்.ஏ லிங்கன கவுடா கூறி உள்ளார்.

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. வெற்றி பெற்ற 78 எம்.எல்.ஏக்களில் 66 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் 12  எம்.எல் ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. எம்எல்ஏ ராஜ வெங்கடப்பா நாயக், மற்றும் வெங்கட ராவ் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் காரணம் தெரியவில்லை. 

காங்கிரஸ்-மதசார்பற்ற கூட்டணியை உடைத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக தலைவர்கள் போனில் அழைப்புவிடுத்துள்ளனர் என  டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். உண்மையில் பாஜகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தான் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர்- எம்பி பாட்டீல்  (காங்கிரஸ்) கூறி உள்ளார்.

கர்நாடகா தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ஆர்.சங்கர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளிக்க ராஜ்பவன் வருகை தந்தார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் அழைப்பதாக எனக்கு தகவல் வந்தது- என சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.