தேசிய செய்திகள்

ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டும் பா.ஜ.க -குமாரசாமி + "||" + BJP offering Rs 100 crores to JD(S) MLAs, says Kumaraswamy

ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டும் பா.ஜ.க -குமாரசாமி

ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டும் பா.ஜ.க -குமாரசாமி
ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது பா.ஜ.க என குமாரசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெங்களூரு

கர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வுசெய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி . ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என  எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என சிலர் செயல்பட்டதால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்.

குதிரை பேரம் நடைபெறுவதை ஜனாதிபதியும் கவர்னரும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக சட்டசபை: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்.அவருக்கு ஆதரவாக 117 வாக்களித்தனர். #Kumaraswamy
2. கர்நாடகாவில் ஆபரேஷன் கமல்-கை: சூடு பிடிக்கும் கடைசிநேர பேரம்
கர்நாடகாவில் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக- காங்கிரஸ் தலைவர்கள் கடைசி நேர பேரத்தில் குதித்துள்ளனர்.
3. கவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு
கர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் ஜனதாதள (எஸ்) தலைவர் குமாரசாமி அணி தாவாமல் இருக்க எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். #KarnatakaElections2018
4. கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை குமாரசாமி சொல்கிறார்
கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி கூறி உள்ளார். #HDKumaraswamy
5. பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவும் கவர்னருக்கு கோரிக்கை
ஆளுநரை மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன் என எடியூரப்பா கூறி உள்ளார். #KarnatakaElections2018