தேசிய செய்திகள்

ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் 2 எம்.எல்.ஏக்களை இழுப்போம் பா.ஜ.கவுக்கு குமாரசாமி எச்சரிக்கை + "||" + Trying to pull an MLA Let's drag 2 MLAs kumaraswamy warns BJP

ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் 2 எம்.எல்.ஏக்களை இழுப்போம் பா.ஜ.கவுக்கு குமாரசாமி எச்சரிக்கை

ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் 2 எம்.எல்.ஏக்களை இழுப்போம் பா.ஜ.கவுக்கு குமாரசாமி எச்சரிக்கை
எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் உங்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம் என குமாரசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரு

கர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வுசெய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி. ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என  எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என சிலர் செயல்பட்டதால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்.

குதிரை பேரம் நடைபெறுவதை ஜனாதிபதியும் கவர்னரும் அனுமதிக்க கூடாது. 

‘ஆபரேஷன் கமல்’ வெற்றிகரமாக நடந்ததை மறந்துவிடக்கூடாது. எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுக்க முயன்றால் நாங்கள் உங்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம். பாஜகவில் இருந்து வெளியேற சில எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளனர். பாஜக குதிரை பேரம் பேசினால் எங்கள் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைப்போம்.
என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னருக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடிதம் : கர்நாடக அரசுக்கு ஆதரவு வாபஸ் ‘ஆட்சிக்கு ஆபத்து இல்லை’ - குமாரசாமி
கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலையில் ஆட்சிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
2. மேகதாது அணை விவகாரத்தில் தலையிட கோரிக்கை : பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், மேகதாது திட்ட பிரச்சினையில் தலையிடுமாறும், மகதாயி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கோரிக்கை விடுத்தார்.
3. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா-பாகிஸ்தான் அல்ல பிரதமரை சந்தித்த பிறகு குமாரசாமி பேட்டி
தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா–பாகிஸ்தான் அல்ல, மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் என்று பிரதமரை சந்தித்த குமாரசாமி தெரிவித்தார்.
4. கொலையாளிகளை சுட்டுத்தள்ள உத்தரவு: மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல்
கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று உத்தரவிட்ட குமாரசாமி, மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
5. மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்
முதல்-மந்திரி குமாரசாமி இன்று(புதன் கிழமை) மதியம் 1.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.