தேசிய செய்திகள்

வடஇந்தியாவில் அடுத்த 72 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீச கூடும் என எச்சரிக்கை + "||" + IMD issues 72 hours warning about thunderstorm

வடஇந்தியாவில் அடுத்த 72 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீச கூடும் என எச்சரிக்கை

வடஇந்தியாவில் அடுத்த 72 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீச கூடும் என எச்சரிக்கை
டெல்லி உள்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த 72 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #IMD

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் 50 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீச கூடும் என தெரிவித்துள்ளது.

இதே வானிலை பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் நாளை நிலவ கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் புழுதி புயலால் இன்று 18 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.  13 பேர் காயமடைந்து உள்ளனர்.

காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 78 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.  அதன்படி, மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன என்றும் சுவர் இடிந்து விழுந்துள்ளன என்றும் தகவல் தெரிய வந்துள்ளது.  இதேபோன்று 13 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 14 வாகனங்கள் புழுதி புயலால் சேதமடைந்து உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த 13ந்தேதியில் இருந்து இடி மற்றும் மின்னலால் 5 மாநிலங்களில் 80 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் 51 பேர் உத்தர பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நீடாமங்கலத்தில் பரபரப்பு: தீயில் கருகி கிடந்த மோட்டார்சைக்கிள் குடும்ப தகராறில் தீ வைத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை
நீடாமங்கலத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று தீயில் கருகி கிடந்தது. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
2. தார் சாலை அமைத்ததில் குறைபாடு: என்ஜினீயர், ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் எச்சரிக்கை
துறையூர் பகுதியில் புதிதாக அமைக்கும் தார் சாலையில் குறைபாடு இருந்ததை கண்டறிந்த கலெக்டர் ராஜாமணி என்ஜினீயர், ஒப்பந்ததாரரை எச்சரிக்கை செய்தார்.
3. ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
ஜனவரி 1-ந்தேதிக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவோர் மீது சட்டப்படி உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் அருகே நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
4. நாகையில் கடல் சீற்றம்: மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
5. புதிய புயல் எதிரொலி: நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதிய புயல் உருவாக உள்ளதால் நாகையில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.