தேசிய செய்திகள்

எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு + "||" + BJP denies Kumaraswamys charge of money being offered to JD(S) MLAs

எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு

எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு
ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது என குமாரசாமி கூறிய குற்றசாட்டுக்கு பாரதீய ஜனதா மறுப்பு தெரிவித்து உள்ளது.
பெங்களூரு

கர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வுசெய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது  பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி. ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என  எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரம் நடத்துகிறது என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சரும் கர்நாடக பாரதீயஜனதா பொறுப்பாளருமான  பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- 

ரூ. 100 கோடி நாங்கள் கொடுப்பதாக கூறப்படுவது கற்பனை மட்டும் அல்ல. காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) நடத்தும் அரசியல் ஆகும். நாங்கள் விதிப்படி நடக்கிறோம். நாங்கள் எங்கள் கோரிக்கையை கவர்னரிடம் வைத்து உள்ளோம் நாங்கள் நிச்சயமாக அரசு அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சட்டுகளை சுமத்துகிறார்கள். இதில், காங்கிரஸ்காரர்கள் புகழ் பெற்றவர்கள். அவர்களது சொந்த எம்.எல்.ஏக்கள் அந்த  கூட்டணியில் மகிழ்ச்சியாக இல்லை என  பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி அணியின் வெற்றி போன்றது, கர்நாடக தேர்தல் வெற்றி - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி, விராட் கோலி அணியின் வெற்றி போன்றது என்றும், கூட்டணிக்கு கிடைத்த பலன் என்றும் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.