உலக செய்திகள்

அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் திறந்தது + "||" + Guatemala opens Israel embassy in Jerusalem after US move

அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் திறந்தது

அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் திறந்தது
அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் இன்று திறந்துள்ளது. #IsraelEmbassy

ஜெருசலேம்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல் அவிவ் நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தினை ஜெருசலேம் நகருக்கு கடந்த திங்கட்கிழமை முன் இடமாற்றினார்.

இதற்கு பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையை நோக்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை கட்டுப்படுத்த இஸ்ரேல் படைகள் துப்பாக்கி சூடு நடத்தின.

இந்த சம்பவத்தில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.  2,400 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் திறந்துள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்சிசியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் இந்த முடிவை புகழ்ந்து பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு, தனது அடுத்த பயணம் கவுதமாலா நாட்டில் இருக்கும் என்று கூறினார்.



தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
2. இஸ்ரேல் கால்பந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது அர்ஜென்டினா
21–வது உலக கோப்பை கால்பந்து திருவிழா வருகிற 14–ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது.
3. இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை உயர்வு
காசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
4. ஈரான் விவகாரம் தொடர்பாக மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேச்சு
ஈரான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பேசியுள்ளார். #Iran
5. இஸ்ரேல்; திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலி
இஸ்ரேலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேர் பலியாகினர். #Isreal #FlashFlood