தேசிய செய்திகள்

கவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு + "||" + Karnataka govt formation: JD(S)-Congress to meet Governor Vajubhai Vala at 5:00 pm today

கவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு

கவர்னருடன்  5 மணிக்கு   குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு
கர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் ஜனதாதள (எஸ்) தலைவர் குமாரசாமி அணி தாவாமல் இருக்க எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். #KarnatakaElections2018
பெங்களூரு

கர்நாடக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாரதீய ஜனதாவும்  கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

கர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி சந்திக்கவுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரவுள்ளார். காங்கிரஸ்-78, மதசார்பற்ற ஜனதா தளம் -37 சேர்த்து 115 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். குமாரசாமியுடன் காங்கரஸ் கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்திக்கவுள்ளனர். 

இந்த நிலையில் கர்நாடகாவில்  எம்.எல்.ஏக்கள் கட்சி தாவலை தடுக்க  காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள்  சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட உள்ளனர். அவர்களை அழைத்துச்செல்ல சொகுசு பேருந்துங்கள் வந்து உள்ளன.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறுவதைத் தடுக்க மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.