தேசிய செய்திகள்

கர்நாடகா ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுப்பு + "||" + Karnataka Governor's House Congress MLAs Go to the parade Denial of permission

கர்நாடகா ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுப்பு

கர்நாடகா ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுப்பு
கர்நாடகாவில் ஆளுநர் மாளிகைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுக்கபட்டது. #KarnatakaElections2018

பெங்களூரு

கர்நாடக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ர ஜனதா தளம் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாரதீயஜனதாவும்  கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

கர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி சந்தித்தார். அவருடன் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர்  கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு ஏதுவாக, மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநர் முன் எம்எல்ஏக்களை நிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் எம்எல்ஏக்கள் அணிவகுப்பாக செல்ல அனுமதி மறுக்கபட்டது.
கவர்னர் சந்திப்புக்கு பிறகு குமாரசாமி கூறியதாவது:-

நாங்கள் அரசாங்கத்தை அமைக்க தேவையான எண்ணிகை எம் எல்.எக்கள் ஒப்புதல் கடிதம் மற்றும் அவசியமான ஆவணங்கள் சமர்ப்பித்து உள்ளோம். அரசியலமைப்புப்படி பரிசீலிப்பதாக  கவர்னர் கூறி உள்ளார் என கூறினார் .

ஆளுநர் மாளிகை முன்பாக குவிந்த காங்கிரஸ், மஜத ஆதரவாளர்கள் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.