தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 25-க்கும் அதிகமான தொகுதிகளில் டெபாசிட் இழந்த பா.ஜனதா! தொகுதிகள் - வாக்குகள் விபரம் + "||" + Karnataka 2018 BJP loses deposit in all 29 seats it contested

கர்நாடகாவில் 25-க்கும் அதிகமான தொகுதிகளில் டெபாசிட் இழந்த பா.ஜனதா! தொகுதிகள் - வாக்குகள் விபரம்

கர்நாடகாவில் 25-க்கும் அதிகமான தொகுதிகளில் டெபாசிட் இழந்த பா.ஜனதா! தொகுதிகள் - வாக்குகள் விபரம்
கர்நாடகாவில் முதலிடம் பிடித்து உள்ள பாரதீய ஜனதா கட்சி 25-க்கும் அதிகமான இடங்களில் டெபாசிட்டை இழந்து உள்ளது. #KarnatakaElections2018 #BJP
பெங்களூரு,

சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
 
பா.ஜனதா 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது. அதே நேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருதரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் இறுதிமுடிவு எடுக்கவேண்டும்.
 
தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1 கோடியே 38 லட்சத்து 24 ஆயிரத்து 5 ஓட்டுகளை பெற்றுள்ளது. இது 38 சதவீதமாகும்.

பா.ஜனதா கட்சிக்கு ஒரு கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 384 ஓட்டுகள் கிடைத்துள்ளது. இது 36.2 சதவீதமாகும்.

ஜனதாதளம் (எஸ்) கட்சி 18.3 சதவீத ஓட்டுகளை வேட்டையாடியுள்ளது. அதாவது, 66 லட்சத்து 66 ஆயிரத்து 307 ஓட்டுகளை அக்கட்சி அறுவடை செய்துள்ளது.

 இதற்கிடையே ஆட்சி அமைக்க போராடும் பாரதீய ஜனதா 25-க்கும் அதிகமான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தேர்தல் ஆணயைத்திடம் டெபாசிட் ஆக கட்ட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியானதும், மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை அந்த வேட்பாளர் பெரும் பட்சத்தில், அவர் கட்டிய தொகை திரும்ப அளிக்கப்படும். அதற்கு குறைவான அளவு வாக்கு பெறும் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழப்பார்கள். பாரதீய ஜனதா கட்சி 25-க்கும் அதிகமான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து உள்ளது. மிகவும் குறைவான வாக்குகளையும் வாங்கி உள்ளது. தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் விபரம்:- 

மாத்தூர்  

டி.சி. தாம்மன்னா மதசார்பற்ற ஜனதா தளம் 109239
மது ஜி தேவேகவுடா   காங்கிரஸ் 55209
சதிஷா பாரதீய ஜனதா 4159

மேலகோட்டை

சிஎஸ் புட்டராஜூ மதசார்பற்ற ஜனதா தளம்  96003
தர்ஷன் சுவராஜ் இந்தியா 73779
சோமசேகராபாரதீய ஜனதா1595

மகாதி 

மஞ்சுநாத் மதசார்பற்ற ஜனதா தளம்119492
பாலகிருஷ்ணா காங்கிரஸ் 68067
ஹனுமந்தராஜ்  பா.ஜனதா4410

ராமாநகரம் 

குமாரசாமி மதசார்பற்ற ஜனதா தளம் 92626
இக்பால் ஹுசைன் காங்கிரஸ் 69990
லீலாவதிபா.ஜனதா 4871


சரவணபெலகோடா 

சிஎன் பாலகிருஷ்ணாமதசார்பற்ற ஜனதாதளம் 105516
சிஎஸ் புட்டேகவுடாகாங்கிரஸ் 52504
சிவானந்த்கவுடா  பாரதீய ஜனதா7506

நாகமங்கலா  

சுரேஷ் மதசார்பற்ற ஜனதா தளம்   112396
 வீரய்யாசாமி காங்கிரஸ் 64729
பார்த்தசாரதி  பாரதீய ஜனதா1915

கிருஷ்ணாராஜ்பேட்டை 

நாராயண கவுடா  மதசார்பற்ற ஜனதா தளம் 88016
கேபி சந்திரசேகர்  காங்கிரஸ் 70897
பிசி மஞ்சு பா.ஜனதா 9819

 Holenarasipur

எச் டி ரேவவன்னா மதசார்பற்ற ஜனதா தளம் 108541
மஞ்சேகவுடா  காங்கிரஸ் 64709
எம் என் ராஜூ பா.ஜனதா 3667

பெரியபட்டணம்
  
மகாதேவ்மதசார்பற்ற ஜனதா தளம் 77770
வெங்கடேஷ்  காங்கிரஸ்70277
மஞ்சுநாத் பா.ஜனதா 4047

கிருஷ்ணராய்நகரா 

மகேஷ் மதசார்பற்ற ஜனதா தளம்  85011
ரவிசங்கர்காங்கிரஸ்83232
கோபாலாபா.ஜனதா2716

முல்பாகல் 

நாகேஷ் சுயேட்சை 74213
மஞ்சுநாத் மதசார்பற்ற ஜனதா தளம் 67498
அமரேஷ்பா.ஜனதா8411

ஸ்ரீனீவாஸ்பூர்

ரமேஷ் குமார்காங்கிரஸ்93571
வெங்கடஷிவா ரெட்டி  மதசார்பற்ற ஜனதா தளம் 83019
கோபால்பா.ஜனதா4208

சிந்தாமணி 

கிருஷ்ணா ரெட்டிமதசார்பற்ற ஜனதா தளம் 87753
சுதாகர்பாரதீய பிரஜா பக்‌ஷா 82080
கிருஷ்ணா ரெட்டி காங்கிரஸ்2233
நா ஷங்கர் பா.ஜனதா1961

 சித்லகட்டா 

முனியப்பா காங்கிரஸ்76240
ரவிகுமார்மதசார்பற்ற ஜனதா தளம் 66531
அஞ்சினப்பாசுயேட்சை 10986
ராஜாண்ணாசுயேட்சை 8593
சுரேஷ்பா.ஜனதா3596

  பாகேபாலி 

 சுப்பாரெட்டி காங்கிரஸ்65710
ஸ்ரீராம ரெட்டிமார்க்சிஸ்ட்51697
மனோகர் மதசார்பற்ற ஜனதா தளம் 38302
சாய்குமார்பா.ஜனதா 4140

மதுகிரி

வீராப்பாதுரை மதசார்பற்ற ஜனதா தளம் 88521
ராஜண்ணாகாங்கிரஸ் 69947
ரமேஷ் ரெட்டிபா.ஜனதா2911

சிக்காபால்பூர்

சுதாகர் காங்கிரஸ் 82006
பஞ்கவுடா மதசார்பற்ற ஜனதா தளம் 51575
நவீன் கிரண்சுயேட்சை 29433
மஞ்சுநாத்பா.ஜனதா5576

காணகுபுரா

டிகே சிவகுமார்காங்கிரஸ் 127552
நாராயணா கவுடாமதசார்பற்ற ஜனதா தளம் 47643
நந்தினி கவுடா பா.ஜனதா6273
  
மாளவாலி

அண்ணதானிமதசார்பற்ற ஜனதா தளம் 103038
நாராயணசாமிகாங்கிரஸ் 76278
சோமேஷ்கார்பா.ஜனதா10808

ஸ்ரீரங்கபட்டணம் 

ரவிந்திர ஸ்ரீகண்ணய்யா மதசார்பற்ற ஜனதா தளம் 101307
ரமேஷா  காங்கிரஸ் 57619
நஞ்சுண்டகவுடா பா.ஜனதா 11326

பாலகேஷிநகர்

ஸ்ரீநிவாஸ்குமார்  காங்கிரஸ் 97574
பிரசன்னகுமார்  மதசார்பற்ற ஜனதா தளம் 15948
சுஜிலா தேவராஜ் பா.ஜனதா9479

 Devanahalli

நாராயணசாமி  மதசார்பற்ற ஜனதா தளம் 86966
வெங்கடசாமிகாங்கிரஸ் 69956
நாகேஷ் பா.ஜனதா  9820

கோலார்

ஸ்ரீநீவாச கவுடா மதசார்பற்ற ஜனதா தளம் 82788
சயத் ஜாமீர் காங்கிரஸ் 38537
 பிரகாஷ்  நம்ம காங்கிரஸ்35544
வெங்கடலாஜபதி பா.ஜனதா 12458

பாவகவுடா

வெங்கடராமனப்பா காங்கிரஸ் 72974
திம்மராயப்பா மதசார்பற்ற ஜனதா தளம் 72565
ஜிவி பாலராம் பா.ஜனதா14074

கோராதாக்ரே

பரமேஸ்வரா  காங்கிரஸ் 81598
சுதாகர்லால் மதசார்பற்ற ஜனதா தளம் 73979
Y.H. HUCHHAIAHபா.ஜனதா12190