தேசிய செய்திகள்

மேம்பாலம் இடிந்து பலி; உடல்களை ஒப்படைக்க குடும்பத்தினரிடம் பணம் வாங்கிய தொழிலாளி கைது + "||" + Man held for charging money from families of flyover collapse victims: Minister

மேம்பாலம் இடிந்து பலி; உடல்களை ஒப்படைக்க குடும்பத்தினரிடம் பணம் வாங்கிய தொழிலாளி கைது

மேம்பாலம் இடிந்து பலி; உடல்களை ஒப்படைக்க குடும்பத்தினரிடம் பணம் வாங்கிய தொழிலாளி கைது
உத்தர பிரதேசத்தில் மேம்பாலம் இடிந்ததில் பலியானவர்களின் உடலை ஒப்படைக்க பணம் வாங்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் பரபரப்பு நிறைந்த சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.  இந்த நிலையில் திடீரென நேற்று அது இடிந்து விழுந்தது.  இதில் 18 பேர் பலியாகினர்.  ஒரு சிற்றுந்து, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவை நசுங்கின.

இந்த சம்பவத்தில் பலியானோரின் உடல்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், பலியானவர்களின் உடல்களை வாங்க அவர்களது குடும்பத்தினர் பிணவறைக்கு வந்துள்ளனர்.  அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்த நபர் ரூ.200 பணம் தரும்படி கேட்டு அவர்களை வற்புறுத்தியுள்ளார்.

இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டது.  அந்த தொழிலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.  போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.