தேசிய செய்திகள்

‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம் + "||" + Ravi Shankar Prasad slams Siddaramaiah for remarks against PM Modi

‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம்

‘குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு, பா.ஜனதா கண்டனம்
‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ என குற்றம் சாட்டிய சித்தராமையாவிற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. #PMModi #Siddaramaiah

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாவும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி கொடுப்பதாக பா.ஜனதா பேரம் பேசுகிறது என குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார். 

சித்தராமையா பேசுகையில், பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை இழுக்க குதிரைபேரத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுக்கிறார்கள்,” என குற்றம் சாட்டினார். ஆளுநர் வாஜுபாய் வாலா முதலில் எங்களை அழைத்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’ என்ற சித்தராமையாவின் குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது, தவறானது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது, அடிப்படையற்றது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோவிலில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.
2. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார்
கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
3. போபர்ஸால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரபேலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் -நிர்மலா சீதாராமன்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், போபர்ஸ் ஊழலால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது, ரபேல் விமான கொள்முதலால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றார்.
4. மேகதாது அணை விவகாரத்தில் தலையிட கோரிக்கை : பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், மேகதாது திட்ட பிரச்சினையில் தலையிடுமாறும், மகதாயி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கோரிக்கை விடுத்தார்.
5. எனக்கும், பரமேஸ்வருக்கும் கருத்து வேறுபாடு இல்லை : சித்தராமையா பேட்டி
போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி பரமேஸ்வரிடம் நான் கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று சித்தராமையா தெரிவித்தார்.