தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு ‘டுவிட்’ செய்தியை பா.ஜனதா நீக்கியது + "||" + After Saying BS Yeddyurappa Oath Tomorrow, Karnataka BJP Deletes Tweet

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு ‘டுவிட்’ செய்தியை பா.ஜனதா நீக்கியது

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு ‘டுவிட்’ செய்தியை பா.ஜனதா நீக்கியது
ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார் என்ற டுவிட் செய்தியை பாரதீய ஜனதா நீக்கிவிட்டது. #BSYeddyurappa #BJP

பெங்களுரூ,


கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா அல்லது தனிப்பெரும் கட்சியான பா.ஜனதாவை அழைப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார் என செய்தி வெளியாகியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து உள்ளார். நாளை காலை 9:30 மணியளவில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்கிறது என கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது. 

இதேபோன்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். நாளை 9:30 மணி அளவில் எடியூரப்பா பதவி ஏற்கிறார் என குறுப்பிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பாரதீய ஜனதா மற்றும் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் இருந்து இதுதொடர்பான செய்திகள் எடுத்துவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை கர்நாடக பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் காண்பித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக அரசியலில் பரபரப்பு : மந்திரி டி.கே.சிவக்குமாருடன் எடியூரப்பா ‘திடீர்’ சந்திப்பு
மந்திரி டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2. விராட் கோலி அணியின் வெற்றி போன்றது, கர்நாடக தேர்தல் வெற்றி - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி, விராட் கோலி அணியின் வெற்றி போன்றது என்றும், கூட்டணிக்கு கிடைத்த பலன் என்றும் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. முதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா
முதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று எடியூரப்பா கூறினார்.
4. மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்
வருமான வரித்துறை அதிகாரியை சந்தித்ததாக கூறிய விவகாரத்தில் மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.
5. பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது என்று தினேஷ் குண்டுராவுக்கு எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.