தேசிய செய்திகள்

பாஜகவை ஆட்சியமைப்பதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு + "||" + Congress appeals to the Supreme Court against the BJP regime

பாஜகவை ஆட்சியமைப்பதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு

பாஜகவை ஆட்சியமைப்பதை  எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு
கா்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநா் அழைத்ததை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. #Congress #Yeddyurappa
கர்நாடகா, 

கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா். பின்னர் பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடா்ந்து கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது, காங்கிரஸ்  கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காங். வழக்கறிஞா் அபிவேக் மனுசிங்வி கூறுகையில்,

உச்சநீதிமன்ற பாஜகவை ஆட்சியமைப்பதை எதிா்த்து முறையீட்டு உள்ளோம் , மேலும் இந்த முறையீட்டை இரவே அவசர வழக்காக விசாாிக்க உச்ச நீதிமன்ற  தலைமைநீதிபதியிடம் நேரம் கேட்க பதிவாளரிடம் கோரிக்கை  விடுத்துள்ளதாக கூறினாா். பின்னர்  நாளை நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே கா்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கவுள்ளாா் என்பதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் பெரும்பான்மையாக இருக்கும் மஜத கட்சியை ஆளுநா் அழைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத்தொடா்ந்து 
முதல்வா் பதவியேற்பு நடந்த பின்னா் வழக்கு தொடுத்தால் பல சட்டசிக்கல்கள் என்படும் . இவ்வாறு அவா் தொிவித்தார்.