தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை பதவியேற்கிறார் எடியூரப்பா, 5 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு? + "||" + Defection Law Won't Apply Before Karnataka Oath

கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை பதவியேற்கிறார் எடியூரப்பா, 5 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு?

கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை பதவியேற்கிறார் எடியூரப்பா, 5 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு?
கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை எடியூரப்பா பதவியேற்கிறார். 5 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #KarnatakaElections
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் படி எந்த ஒருக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக  வென்றது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 78 இடங்களிலும்,  ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

.இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா கவர்னரை நேரில் சந்தித்து, பா.ஜனதாவை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதே போல் காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் தனக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இந்த சூழலில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்ப்பு விடுத்தார். மேலும், பதவியேற்ற 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவு காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை  ஏற்று மிகவும் அரிதாக இந்த வழக்கை நள்ளிரவே விசாரணை எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், விடிய விடிய விசாரணை நடத்தியது. பின்னர், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தது. மேலும், எடியூரப்பா ஆளுநருக்கு அளித்த கடித நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இன்று காலை பதவியேற்பு:

பதவியேற்பதற்கு எந்த தடையும் இல்லாததையடுத்து, இன்று காலை 9 மணியளவில் கர்நாட முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். எடியூரப்பாவுடன் 5 அமைச்சர்கள் பதவியேற்க கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

குருப்பாஸ் சமுதாயத்தைச்சேர்ந்த ஈஸ்வரப்பா, ஒக்களிக சமுதாயத்தைச்சேர்ந்த ஆர்.அசோக், எஸ்.சி சமுதாயத்தைச்சேர்ந்த கோவிந்த கரஜோலா, எஸ்.டி சமுதாயத்தைச்சேர்ந்த ஸ்ரீராமலு பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எடியூரப்பா தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைமையின் அனுமதி கிடைத்தால் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.