தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை + "||" + petrol diesel price hike 4th stright day

பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை

பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை
பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #PetrolPrice #Dieselprice
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் 13-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 13 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக ஏற்றத்திலேயே உள்ளது வாகன ஒட்டிகளை கவலை அடையச்செய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு  0.23 காசுகளும், டீசல் விலை 0.24 காசுகளும் அதிகரித்துள்ளது.