தேசிய செய்திகள்

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்றார் எடியூரப்பா + "||" + BS Yeddyurappa arrives at Raj Bhavan, to take oath as Karnataka Chief Minister shortly

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்றார் எடியூரப்பா

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின்  முதல் மந்திரியாக பதவியேற்றார் எடியூரப்பா
பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார். #Karnataka
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் படி எந்த ஒருக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக  வென்றது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 78 இடங்களிலும்,  ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

.இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எடியூரப்பாவும், குமராசாமியும் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். சட்ட ஆலோசனைகளை நடத்திய ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். மேலும், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ்  முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா எந்த வித சிக்கலும் இன்றி முதல் அமைச்சராக  பதவியேற்க வழி கிடைத்தது. இதையடுத்து, பதவியேற்புகான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகை புறப்பட்ட எடியூரப்பாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பதவியேற்பதற்கு முன்பாக பெங்களூருவில் உள்ள கோவிலில் எடியூரப்பா சாமி தரிசனம் செய்தார். 

பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, ஆளுநர் மாளிகை முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆளுநர் மாளிகை முன்பு குவிந்த பாரதீய ஜனதா தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக மாநிலத்தின், 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார்.