தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்: ராகுல் காந்தி + "||" + The BJP’s irrational insistence that it will form a Govt : Rahul

பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்: ராகுல் காந்தி

பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்: ராகுல் காந்தி
பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். #RahulGandhi #Karnataka
புதுடெல்லி,

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. 

அதேவேளையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதாக கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியது. சட்ட ஆலோசனைகளை நடடத்திய ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ்  முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

 உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா எந்த வித சிக்கலும் இன்றி முதல் அமைச்சராக பதவியேற்க வழி கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். பாஜக, வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் கொள்ளும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல் காந்தி
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
2. பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் - மஹ்பூபா
பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி மஹ்பூபா முஃப்தி கூறி உள்ளார்.
3. ராகுல் காந்தியை முன்மொழிந்த விவகாரம்: ‘தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை’ - இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கருத்து
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை என இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கூறியுள்ளன.
4. ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம்; தமிழிசை சௌந்தரராஜன்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5. ரபேல் விவகாரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் -ராஜ்நாத் சிங்
ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.