தேசிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட காங்.தலைவர்கள் தர்ணா + "||" + congress holds protest at Mahatma Gandhi's statue in Vidhan Soudha

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட காங்.தலைவர்கள் தர்ணா

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட காங்.தலைவர்கள்  தர்ணா
எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூரு, 

பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 

சித்தராமையாவுடன் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போரட்டத்தில் கலந்து கொள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பிடதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் புறப்பட்டுள்ளனர். 



தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் மாளிகை மூலம் நிதி வசூலித்த ஆதாரங்களை மறைக்க முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
கவர்னர் மாளிகை மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை மறைக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
2. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் புதுவை மாநில எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
3. விருதுநகர் நகராட்சியில் திட்டப்பணி நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
விருதுநகர் நகராட்சியில் திட்டப்பணி நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
4. ‘காங்கிரஸ் மூழ்கும் கப்பல்; அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கும்’ - தமிழிசை சவுந்தரராஜன்
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் மூழ்கத்தான் போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
5. நான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் -மூத்த தலைவர் திக்விஜய் சிங்
நான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியால் கட்சிக்குள் குழப்பம்.