தேசிய செய்திகள்

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்-கேரளா முதல்வா் பினராயி விஜயன் + "||" + Today is a sad day for Karnataka and a sadder day for Indian democracy-Pinarayi Vijayan ‏

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்-கேரளா முதல்வா் பினராயி விஜயன்

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்-கேரளா முதல்வா் பினராயி விஜயன்
ஆளுநா் வஜூபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா்.
சென்னை

கா்நாடக சட்டமன்ற தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி எந்தவித நிபந்தனையும் இன்றி மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாா் என்று அறிவித்து. 

தங்களிடம் தனிப்பெரும்பான்மை இருப்பதாக மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவா் குமாரசாமி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உாிமை கோாினாா். இதே போன்று பா.ஜ.க.வின் முதல்வா் வேட்பாளா் எடியூரப்பாவும், தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் வழங்கினாா். 

அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தாா். இதனை எதிா்த்து காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடா்ந்தது. ஆனால் முதல்வராக பொறுப்பேற்க தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து எடியூரப்பா இன்று காலை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா். இது தொடா்பாக கேரளா முதல்வா் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளாா். தனது டுவிட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகாம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு  ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
 இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை குறைத்து விடும். ஆளுநரின் இச்செயல் குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும்” என்று கருத்து தொிவித்துள்ளாா்.