தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் காயம் + "||" + Jawan injured as Pakistan targets border posts, civilian areas

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் காயம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் காயம்
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். #Ceasefire
ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மற்றும் கதுவா மாவட்டத்தில் உள்ள எல்லை நிலைகளை குறிவைத்தும், பொதுமக்கள் வசிக்கும் சில பகுதிகளை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. சிறிய மோர்டார்கள் மூலம் பாகிஸ்தன் நேற்று இரவு முழுவதும் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

  இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த மே 15 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இந்த ஆண்டு மட்டும் எல்லையில் பாகிஸ்தான் 700 முறை அத்து மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 17 பேர் உட்பட 33 பேர் பலியாகியுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
2. காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா
காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் ராஜினாமா செய்துள்ளார்.
3. ஜம்மு காஷ்மீர்: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி, 34 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் பலியானார்.
4. ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் -இரண்டு ராணுவ அதிகாரிகள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.
5. ஜம்மு-காஷ்மீரில் 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்: 71.3 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில், 71.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.