தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்- தமிழக அரசு | தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு, கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முற்றுகை போராட்டம் | தூத்துக்குடி கலவரம் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆறுதல் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வரும் 25-ம் தேதி, திமுக தோழமை கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை |

தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி: முதல் மந்திரி எடியூரப்பா + "||" + BS Yeddyurappa holds cabinet meeting after swearing-in; announces Rs 1 lakh farm loan waiver.

கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி: முதல் மந்திரி எடியூரப்பா

கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி: முதல் மந்திரி எடியூரப்பா
கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யும் ஆணையில் முதல் மந்திரி எடியூரப்பா கையெழுத்திட்டுள்ளார். #KarnatakaCM #Yeddyurappa
பெங்களூரு,

பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். சித்தராமையாவுடன் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 

இது ஒருபுறம் இருக்க, தலைமைச்செயலகம் வந்து தனது பணிகளை துவங்கிய முதல் மந்திரி எடியூரப்பா, ரூ. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான  விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஆணையில், தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.