தேசிய செய்திகள்

அரசியல் ஆதாயத்துக்காக மதசார்பற்ற ஜனதா தளத்தை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது-அமித்ஷா + "||" + President of the Congress obviously doesn’t remember the glorious history of his party-Amit Shah ‏

அரசியல் ஆதாயத்துக்காக மதசார்பற்ற ஜனதா தளத்தை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது-அமித்ஷா

அரசியல் ஆதாயத்துக்காக மதசார்பற்ற ஜனதா தளத்தை  காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது-அமித்ஷா
அரசியல் ஆதாயத்துக்காக மதசார்பற்ற ஜனதா தளத்தை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது- அமித்ஷா குற்றச்சாட்டு
புதுடெல்லி

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. 

அதேவேளையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதாக கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியது. சட்ட ஆலோசனைகளை நடத்திய ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

இதை தொடர்ந்து  எடியூரப்பா இன்று காலை முதல் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இது குறித்து விமர்சனம் செய்த   ராகுல் காந்தி பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் என கூறி உள்ளார்.  இதற்கு பதிலடி கொடுத்து உள்ள பாரதீய ஜனதா தேசிய தலைவர்  அமித்ஷா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-

காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல்காந்தி மறந்துவிடக்கூடாது.

தேர்தலுக்கு பின் அரசியல் ஆதாயத்துக்காக மஜதவை காங்கிரஸ் பயன்படுத்துவது வெட்கக்கேடானது கர்நாடக மக்கள் யாரை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது தேர்தல் முடியில் தெளிவாக தெரிகிறது. என கூறி உள்ளார்.

ராகுல் காந்தியின் கட்சியின் மரபு, கொடூரமான அவசரநிலை, 356 வது சட்டத்தைத் தவறாக பயன்படுத்துதல், நீதிமன்றங்கள், ஊடகம் மற்றும் சிவில் சமூகத்தைத் கையாளுவது ஆகும்.

கர்நாடகாவில் மக்கள் பாரதீய ஜனதாவிற்கு வாக்களித்து உள்ளது அதனால் அது 104  தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.

78 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், அதன் சொந்த மந்திரிகளும், மந்திரிகளை பெரிய அளவில் இழந்தது ஜனதா தளம் (எஸ்) 37 இடங்களை மட்டுமே வென்றது, பல இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது.
மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு -ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மனத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் இடமில்லை என்றும், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
2. நர்மதை நதியில் ராகுல்காந்தி வழிபாடு
நர்மதை நதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
3. ரஃபேல் போர் விமான ஊழல்: பிரதமர் மோடியை இடைவிடாது தாக்கும் ராகுல் காந்தி
ரஃபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடியை இடைவிடாது தொடர்ந்து தாக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. #RahulGandhi #PMModi
4. மோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி
மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
5. மோடியும் அம்பானியும் இணைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு
மோடியும் அம்பானியும் இணைந்து பாதுகாப்பு படை மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.