தேசிய செய்திகள்

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை + "||" + West Bengal panchayat election 2018: TMC races to early lead in gram panchayat seats

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 1800 கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது.
கொல்கத்தா

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. 
கடந்த 14ம் தேதி மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில்  621 ஜில்லா பரிஷத்,   6,123   பஞ்சாயத்து சமித் 31802 கிராம பன்ச்ஜாயத்துக்களுக்கு தேர்தல் நடைபெற்றது.  இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். 

இந்நிலையில் ஜல்பய்குரியின் பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 40 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

10 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,800 கிராம பஞ்சாயத்து இடங்களில் முன்னிலையில் உள்ளது.  பாரதீய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில்  உள்ளன.