மாநில செய்திகள்

பி.இ. ஆன்லைன் விண்ணப்பம் - கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு + "||" + BE On-line application - Interaction To ban Dismissal of Chennai High Court

பி.இ. ஆன்லைன் விண்ணப்பம் - கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

பி.இ. ஆன்லைன் விண்ணப்பம் - கலந்தாய்வுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
பி.இ ஆன்லைன் விண்ணப்பம்- கலந்தாய்வு முறைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை

ஆன்லைன் மூலமாக மட்டுமே பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும், நேரடி கலந்தாய்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் முறை மூலமாக மட்டும் கலந்தாய்வு நடைபெறும் பட்சத்தில் அது கிராமப்புற மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மனுதாரா்கள் தரப்பில் தொிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளும் எந்தவித குற்றச்சாட்டும் எழவில்லை. 

ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுவதால், நேரம் மிச்சமாகிறது. இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்கலைக்கழகம் சாா்பில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய வெளிப்படைத் தன்மை இருப்பதால் இதற்கு தடை விதிக்கக் கூடாது என்று தொிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்வதாக தொிவித்த நீதிபதிகள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது. மேலும் டிடி முறையில் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்பதை பல்கலைக்கழகம் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனா். 

தொடர்புடைய செய்திகள்

1. நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
2. கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜா புயல் காரணமாக 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3. அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் ரூ.546¾ கோடியில் கட்டப்பட்ட திறன்மிகு மையம்
குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் திறன்மிகு மையத்தை காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
4. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு மேலும் 30 பேருக்கு தொடர்பு அம்பலம்
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
5. ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடமில்லை- அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா
ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடமளிக்க முடியாது என அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார்.