உலக செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 'விலங்குகள்' -டொனால்ட் டிரம்ப் + "||" + Donald Trump calls some illegal immigrants as animals

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 'விலங்குகள்' -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 'விலங்குகள்' -டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை 'விலங்குகள்' என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.
வாஷிங்டன்

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற  அரசியல் தலைவர்கள் மற்றும் கலிபோர்னியாவில் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்ட  வட்டமேஜை கூட்டத்தில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும்போது கூறியதாவது:-

சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை  நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை  நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம்.  இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல  விலங்குகள்.

பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து  வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம்  மீண்டும் பிடிக்கிறோம் மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம்.

முட்டாள் சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது.

கலிஃபோர்னியா சட்டமானது சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள்,  வன்முறை கும்பல்  ஆகியோரை  விடுவிப்பதை கட்டாயப்படுத்துகிறது.

அமெரிக்காவிற்கு  சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்.

நாங்கள் தகுதி அடிப்படையில் நமது நாட்டிற்கு வர வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் நமக்கு தேவை, அவர்களுக்கு நாம் தேவை,  நாம் அவர்களை உள்ளே கொண்டு வருகிறோம். 

அமெரிக்காவிற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நிறுவனங்கள் மீண்டும் வருகின்றன. மெக்சிகோவிலிருந்து சில நிறுவனங்கள் வருகின்றன என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் -வைரலான புகைப்படம்
சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் படுத்திருப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
2. இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர்
இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவர் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் பதவியைத் துறந்த 2 நாட்களில் மீண்டும் திருப்பம்
ரஷ்ய அழகியை மணந்த மலேசிய மன்னர் தனது பதவியைத் துறந்த செய்தி வெளியான இரண்டே நாட்களில், அவர் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. கடவுளின் அவதாரமாக வணங்கப்படும் ஒற்றைக்கண் பசு
மேற்கு வங்காளத்தில் கடவுளின் அவதாரமாக ஒற்றைக்கண் பசு வணங்கப்பட்டு வருகிறது.
5. ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர்: மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதி
ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர் மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.