தேசிய செய்திகள்

நாட்டின் அனைத்து அமைப்பிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவி வருகிறது, அது தான் இந்தியாவின் குரல் -ராகுல்காந்தி + "||" + Rahul Gandhi Says RSS Filling Institutions That Are "Voice Of India"

நாட்டின் அனைத்து அமைப்பிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவி வருகிறது, அது தான் இந்தியாவின் குரல் -ராகுல்காந்தி

நாட்டின் அனைத்து அமைப்பிலும்  ஆர்எஸ்எஸ் ஊடுருவி வருகிறது, அது தான் இந்தியாவின் குரல் -ராகுல்காந்தி
நாட்டின் அனைத்து அமைப்பிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவி வருகிறது, அது தான் இந்தியாவின் குரல் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ராய்ப்பூர் 

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

 பார்லிமென்டில் பா.ஜ. எம்.பி.க்களை சந்தித்துள்ளேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல் பயத்தில் உள்ளனர். பிரதமர் முன்னிலையில், எந்த ஒரு வார்த்தையும் கூற முடியாது. ஆர்எஸ்எஸ் அனைத்து அமைப்பிலும் ஊடுருவி வருகிறது. அதுதான் இந்தியாவின் குரலாக உள்ளது. சர்வாதிகார நாட்டில் தான் இது  நடக்கும். "இது பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவில் நடந்து உள்ளது. ஆனால் இந்தியாவில் 70 ஆண்டுகளில் இது முதல் முறையாக நடந்து உள்ளது.

கர்நாடகாவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள், அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல். அங்கு, எம்எல்ஏக்கள் ஒருபுறமும், கவர்னர் மறுபுறமும் நின்று கொண்டுள்ளனர். எம்எல்ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் வரை பா.ஜ., சார்பில் பேரம் பேசப்படுவதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.