தேசிய செய்திகள்

காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் - எடியூரப்பா வேதனை + "||" + Karnataka CM BS Yedyurappa addresses the media in Bengaluru

காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் - எடியூரப்பா வேதனை

காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் - எடியூரப்பா வேதனை
காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் என எடியூரப்பா குற்றம் சாட்டிஉள்ளார். #BSYedyurappa
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12–ந்தேதி நடந்தது. இதையடுத்து கடந்த 15–ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜனதா 104 இடங்களை பிடித்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களில் வெற்றி பெற்றன. யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அவசர, அவசரமாக ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அதேபோல, தாங்கள் தனிபெரும் கட்சியாக உள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு எடியூரப்பாவும் கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கி உள்ளது. இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது.

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி நடவடிக்கையை எடுத்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு அருகே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இப்போது எடியூரப்பா ஆட்சி அமைத்து உள்ளநிலையில் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு, விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டிஉள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - முகுல் வாஸ்னிக் பேட்டி
5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று முகுல் வாஸ்னிக் கூறினார்.
2. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு: மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம், காங்கிரஸ் கட்சி ஆவேசம்
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பினால் மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
3. காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி பெருமிதம்
காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பெருமிதம் அடைந்துள்ளார்.
4. பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை; காங்கிரஸ் வலியுறுத்தல்
வேலை இழந்து தவிக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. கர்நாடக அரசியலில் பரபரப்பு : மந்திரி டி.கே.சிவக்குமாருடன் எடியூரப்பா ‘திடீர்’ சந்திப்பு
மந்திரி டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.