தேசிய செய்திகள்

சோனியா மற்றும் பிரியங்கா காந்தியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப் மந்திரி சித்து சந்திப்பு + "||" + Sidhu meets Sonia, Priyanka

சோனியா மற்றும் பிரியங்கா காந்தியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப் மந்திரி சித்து சந்திப்பு

சோனியா மற்றும் பிரியங்கா காந்தியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப் மந்திரி சித்து சந்திப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாப் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை இன்று சந்தித்து பேசினார். #NavjotSinghSidhu

சண்டிகார்,

பஞ்சாப் சட்டசபை தேர்தல் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது.  முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து அதற்கு முன் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.  காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர் அமைச்சரவையில் மந்திரியானார்.

இந்த நிலையில், கடந்த 1988ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் 65 வயது முதியவருக்கு காயம் ஏற்படுத்தினார் என சித்து மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த சம்பவத்தில் முதியவர் உயிரிழந்து விட்டார்.  30 வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் கடந்த 15ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.  அதில் அவரை குற்றவாளி என அறிவித்து ரூ.1,000 அபராதம் விதித்தது.  ஆனால் சிறை தண்டனையில் இருந்து அவரை விடுவித்தது.

இந்த நிலையில், தனது புதிய இன்னிங்சை தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசினார்.

அவர் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்பதனை அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த சந்திப்பினை உண்மையான ஒரு வீரர் மற்றும் அவரது தலைவர் இடையேயான சந்திப்பு என சித்து குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோன்று பிரியங்கா காந்தியையும் அவர் சந்தித்து பேசினார்.  தனக்கு ஓர் உந்துதலாக இருந்ததுடன் துன்பநேரங்களில் ஆதரவாக நின்றார் என்று சித்து கூறியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்வதற்கு ஒரு சக்தியாக என் பின்னால் இருந்தவர் அவர் என்றும் சித்து கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. மிகவும் துயரமான சம்பவம்; அலட்சியமிருந்துள்ளது, ஆனால் உள்நோக்கம் கொண்டது கிடையாது - நவ்ஜோத்சிங் சித்து
அமிர்தசரசில், ரெயில் தண்டவாளம் அருகே தசரா கொண்டாடியவர்கள் மீது ரெயில் மோதியதில் காயம் அடைந்தவர்களை நவ்ஜோத்சிங் சித்து சந்தித்து ஆறுதல் கூறினார்.
2. அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: சோனியா காந்தியை சிக்கவைக்க மத்திய அரசு சதிதிட்டம் - காங்கிரஸ்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைக்க தரகரை மத்திய அரசு பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
3. “எங்களுக்கு உறுப்பினர்கள் இல்லையென யார் சொன்னது?” சோனியா காந்தி கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெள்ளிக்கிழமை மக்களவையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. #NoConfidenceMotion
4. பிராமண பெண்ணை ராகுல் திருமணம் செய்து கொள்ள சோனியா காந்தியை வலியுறுத்தினேன் தெலுங்குதேசம் எம்.பி
பிராமண பெண்ணை ராகுல் திருமணம் செய்து கொள்ள சோனியா காந்தியை வலியுறுத்தினேன் தெலுங்குதேசம் எம்.பி கூறியுள்ளார். #Rahul
5. டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.