தேசிய செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு + "||" + Parameshwar is the chairman of the Karnataka Congress Party Legislative Assembly

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #CongressParty

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ந்தேதி நடந்து முடிந்தது.  அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 15ந்தேதி நடந்தது.  இதில் பாரதீய ஜனதா கட்சி 104 தொகுதிகளை கைப்பற்றியது.  அதிக தொகுதிகளை கைப்பற்றிய தனி கட்சியாக அது உருவெடுத்தது.

மொத்தமுள்ள 224 உறுப்பினர்களுக்கான சட்டசபைக்கு பெரும்பான்மையை பெற பாரதீய ஜனதாவிற்கு 8 சீட்டுகள் பற்றாக்குறையாக இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியானது தனது ஆதரவை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு வழங்க முடிவு செய்தது.

இதனால் அந்த இரு கட்சிகளும் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதாவிற்கு போட்டியாக உருவானது.  இந்த நிலையில் இரு கட்சிகளும் ஆளுநரிடம் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.  இதேபோன்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டசபை குழு தலைவராக குமாரசாமி தேர்வானார்.

இந்நிலையில், ஆளுநர் விடுத்த அழைப்பினை அடுத்து எடியூரப்பா இன்று முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.  அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஈகிள்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இங்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்குவதே காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் நோக்கம்; பா.ஜ.க. குற்றச்சாட்டு
இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்குவதே காங்கிரஸ் கட்சி மற்றும் பாகிஸ்தானின் நோக்கம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
2. முன்னாள் மத்திய மந்திரி குருதாஸ் காமத் திடீர் மரணம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத் உடல்நல குறைவால் இன்று திடீர் மரணம் அடைந்து உள்ளார்.
3. ஜனநாயக ஈடுபாடு கொண்ட காங்கிரஸ் அம்பேத்காருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை? சுப்ரமணியன் சுவாமி கேள்வி
ஜனநாயகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட காங்கிரஸ் கட்சி அம்பேத்காருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை; சித்தராமையா
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை என முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah