தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை; சித்தராமையா + "||" + Congress party MLAs do not serve a horse deal, Siddaramaiah

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை; சித்தராமையா

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை; சித்தராமையா
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை என முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah
பெங்களூரு,

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 15ந்தேதி நடைபெற்றது.  இதில் பாரதீய ஜனதா கட்சி 104 தொகுதிகளை கைப்பற்றி அதிக தொகுதிகளை கைப்பற்றிய தனி கட்சியாக அது உருவெடுத்தது.

சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட்டதில் தனது சொந்த ஊரான சாமுண்டீஸ்வரியில் 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  அதே நேரத்தில் பாதாமி தொகுதியில் அவர் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றார்.  கர்நாடக பா.ஜனதா தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான எடியூரப்பா சிகாரிப்புரா தொகுதியில் 35 ஆயிரத்து 394 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி, ராமநகர், சென்னபட்டணா ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி வாகை சூடினார். அவற்றில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார்.

எனவே 221 இடங்களில் மெஜாரிட்டி பலம் பெறுவதற்கு 111 இடங்கள் தேவை. இதில் 104 இடங்களை கைப்பற்றி உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியானது தனது ஆதரவை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு வழங்க முடிவு செய்தது.  இதனால் அந்த இரு கட்சிகளும் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதாவிற்கு போட்டியாக உருவானது.  எனினும், ஆளுநரின் அழைப்பினை அடுத்து எடியூரப்பா இன்று முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்காக குதிரை பேரம் நடக்கிறது என கூறப்பட்டது.  இதுபற்றி பேசிய சித்தராமையா, பாரதீய ஜனதாவின் செயல் நியாயமற்றது, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது.  எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு பணியவில்லை என கூறியுள்ளார்.