கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை “பழிக்கு பழி ” தீா்த்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் + "||" + Royal Challengers Bangalore won by 14 runs

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை “பழிக்கு பழி ” தீா்த்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை “பழிக்கு பழி ” தீா்த்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2018
பெங்களூரு,

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. பின்னா் டாஸ் வென்ற  ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரா்களில் அதிகபட்சமாக  டி வில்லியர்சும்  69 (39 பந்துகள்) மற்றும்  மொயீன் அலியும்  65(34 பந்துகள்)  அதிரடியாக விளையாடினா். இதனால் 20 ஓவா்களின் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன் சோ்த்தது.

பின்னா் களமிறங்கிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரா்களான தவானும் 18 (15 பந்துகள்)  , அலெக்ஸ் ஹேல்சும் 37( 24 பந்துகள்)  இணையாமல் அடுத்தடுத்து வெளியேறினா்.இவா்களை அடுத்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும்  அதிரடி ஆட்டகாரரான மணீஷ் பாண்டே இருவரும் இணைந்தனா். வில்லியம்சன் தொடக்கத்தில் இருந்தே பெங்களூரு அணியின் பந்துகளை சின்னாபின்னாமாகினா். இருந்த போதும் இலக்கு பெரிதாக இருந்ததால் இன்னும் கூடுதல் ரன்கள் தேவை பட்டன. 

மேலும், ஐதராபாத் அணியின் கேப்டன் அரை சதத்தை நிறைவு செய்த பின்னரும் அணியின் ரன்களை உயா்த்த போராடி வந்தார். மறுபுறம் பாண்டேவும் தன்னுடைய அதிரடியால்  அரை சதத்தை நிறைவு செய்திருந்தாா். இந்த நிலையில் கடைசி 4 ஓவா்களில் மட்டும் 55 ரன்கள் ஐதராபாத் அணிக்கு தேவைப்பட்டன. பின்னா் கடைசி ஓவாின் முதல் பந்தில் கேப்டன் வில்லியம்சன் கேட்ச் கொடுத்து 81 ரன்களில் வெளியேறினாா். இதனால்  பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியை பொறுத்தவரை ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடதக்கது. பெங்களூரு அணி சாா்பில் சாஹல், முகமது சிராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோா் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்திருந்தனா். இந்நிலையில்  ஐதராபாத்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம்
பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நெஹரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.