தேசிய செய்திகள்

எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு: இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை + "||" + All eyes on BS Yeddyurappa's letter to the Governor

எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு: இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு: இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. #SupremeCourt #KarnatakaElections2018
புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க வரிந்து கட்டிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது.இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடுத்தனர். வழக்கில், எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்க தடை விதிக்க கோரினர்.

இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார்.இந்த அமர்வு நள்ளிரவு கடந்து 2.11 மணிக்கு தன் விசாரணையை தொடங்கியது. நேற்று அதிகாலை 5.28 மணிக்கு விசாரணை முடிந்தது. 

இதையடுத்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்பதை இந்த வழக்கின் தீர்ப்பு கட்டுப்படுத்தும் எனவும், ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு எடியூரப்பா 15 மற்றும் 16 தேதிகளில் எழுதிய கடிதங்களை வாசித்து ஆராய வேண்டிய து உள்ளது. அந்த கடிதங்களை கோர்ட்டில் அட்டார்ஜி ஜெனரல்,  வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதனால், இந்த வழக்கு ,இன்று காலை 10.30-க்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால், கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது. 

முன்னதாக, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உடனடியாக எடியூரப்பா முதல் மந்திரியாக நேற்று பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்திகள்

1. புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்றபோது கதறியழுத பெண்ணின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய கவர்னர்
திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட சென்ற கவர்னரிடம் பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காதது குறித்து கதறி அழுதனர். அப்போது கதறியழுத ஒரு பெண்ணின் கண்ணீரை, கவர்னர் துடைத்து ஆறுதல் கூறினார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ செய்தது.
2. குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், குற்றப் பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3. கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பு : எடியூரப்பாவுடன் ஜனார்த்தனரெட்டி திடீர் சந்திப்பு
பெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. சொந்த கிராமத்தில் வயலில் தொழிலாளர்களுடன் வேலை செய்த அமைச்சர் கமலக்கண்ணன்; கவர்னர், முதல்-அமைச்சர் பாராட்டு
சொந்த கிராமத்தில் வயலில் இறங்கி தொழிலாளர்களுடன் வேளாண்மைதுறை அமைச்சர் கமலக்கண்ணன், வேலை செய்தார். இதை புதுச்சேரி கவர்னர் கிரண் பெடியும்,முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பாராட்டி உள்ளனர்.
5. ஜனதாதளம்(எஸ்) குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் எடியூரப்பா, தனது மகனை சிவமொக்கா தொகுதியில் நிறுத்தியது ஏன்?
ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்று விமர்சித்து வரும் எடியூரப்பா, இடைத்தேர்தலில் தனது மகனை சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியது ஏன்? என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.